top of page

THE SIXTH LAND (2019 TAMIL)




எமது முழுநீளத்திரைப்படம் ‘ஆறாம் நிலம்’ இன்றுடன் அதனது உருவாக்க வேலைகள் நிறைவடைந்துள்ளன. இத்தருணத்தில் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன். முதலாவதாக, இப்படத்தினை உருவாக்க பொருளாதார உதவிகள் செய்த பாஸ்கரன் கந்தையா (ஐபிசி தமிழ்) அவர்களுக்கு எனது நன்றிகள். இத்திரைப்படத்தின் இயக்குனரும் எனது நண்பராகிய ஆனந்த ரமணன் அவர்களுக்கு என்னை ஒளிப்பதிவாளராக, பின் உருவாக்க வேலைகளை மேற்பார்வையிட தேர்ந்தெடுத்தமைக்காகவும் நன்றிகள். அத்துடன் என் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள சுகந்திரமான, தோழமையான ஒரு சூழலை தந்தமைக்காகவும் நன்றிகள். இப்படத்திற்கு முதுகெலும்பாக விளங்கிய நடிக நடிகையர்களுக்கு என் நன்றிகள். மிக முக்கியமாக படப்பிடிப்பு உதவியாளர்கள், தயாரிப்பு வேலையாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் கடும் வெயிலில் கூட சிறப்பாக கடமையாற்றியதற்காக என்னுடன் ஒத்துழைத்து பணியாற்றியதற்காக நன்றிகள். இத்திரைப்படம் முழுமையடைய பணிபுரிந்த பின் உருவாக்க வேலைகளில் தம்மை ஈடுபடுத்திய குறிப்பாக எடிடர் சஜீத் அவர்களுக்கும் எனது நன்றிகள். அத்துடன் உயிரோட்டமான இசையை தந்த இசையமைப்பாளர் வீரக்கொடி அவர்களுக்கு என் நன்றிகள். இவர்களுடனான இந்த நீண்ட நாள் பயணம் ஓர் அழகிய முழுமையான திரைப்படத்துடன் நிறைவடைந்துள்ளது. இதற்காக உழைத்த அனைத்து கலைஞர்களுக்கும் நண்பர்களுக்கும் மீண்டும் எனது நன்றிகள்!


20 views0 comments

Comments


bottom of page