பூசி மெழுகிப் பேசுவதும், பொய்யான வார்த்தைகளால் போற்றிப் புழுகுவதுமே நாகரீகம் என நம்பும் உலகில் பூசி மெழுகவதையும் பொய்யாக போற்றுவதையும் வளர்ச்சிகான தடை என உறுதியாக நம்பும் ஒரு உன்னதமான படைப்பாளியின் பிறந்ததினம் இன்று.
காலத்தை முந்திச் சிந்திப்பதாலும் செயற்படுவதாலும் பித்தன் என்றும் சைக்கோ என்றும் பெயெரெடுத்த ஒரு தமிழ்ச் சினிமா ஆசானின் பிறந்ததினம் இன்று.
மாஸ்டர் மிஸ்கின்!
இந்த இனிய நாளில் நான் உறுதியாகவும் உரத்தும் சொல்ல நினைப்பது...
இனி வரும் காலம் மிஸ்கினுடையது.
இனி வரும் காலம் மிஸ்கினுடையது.இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர் மிஸ்கின்
ஏனெனில்...
தமிழ் சினிமா மாற்றம் காணத் தொடங்கிவிட்டது, அல்லது அது மாற்றத்துக்கு ஆளாக வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
ஏனெனில்...
தமிழ் சினிமா இரசிகர்கள் மாறிவிட்டார்கள். மாறிக் கொண்டிருக்கிறார்கள்.
வரப்புயர நீருயரும்
நீருயர நெல்லுயரும்
நெல்லுயரக் குடியுயரும்
குடியுயரக் கோலுயரும்
கோலுயரக் கோனுயர்வான்
தமிழ் சினிமா இரசிகர்கள் உலகின் உன்னத சினிமாக்களை தரிசிக்கவும் இரசிக்கவும் தொடங்கிவிட்டார்கள்.
இனிமேல் மிஸ்கின் உலக சினிமாக்களை உதாரணம் காட்டிப் பேசவும் தேவையில்லை மேதாவி என பெயர் எடுக்கவும் வேண்டியதில்லை. தமிழ் சினிமா இரசிகர்களே அதைச் செய்யத் தொடங்கிவிட்டார்கள். தமிழ் சினிமாவை உலகின் உன்னத சினிமாக்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் போலிச் சினிமாக்களை நிராகரிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.
அக்கிரா குரோசோவாவையும் அல்பிரெட் ஹிட்ச்ஹொக் ஐயும் மேற்கோள்காட்டி இனி மிஸ்கின் எந்த மேடையிலும் பேச வேண்டியதில்லை. எந்த பேடியிலும் கதைக்க வேண்டியதில்லை. ஏனெனில் அக்கிரா குரோசோவாவையும் அல்பிரெட் ஹிட்ச்ஹொக் ஐயும் தமிழ் சினிமா இரசிகர்கள் அறியத் தொடங்கிவிட்டார்கள்.
நட்சத்திர நடிகர்கள், மாஸ் ஹீரோக்களையும் மிஸ்கின் அவமதிக்கிறார் என இனி யாரும் சொல்ல வேண்டியிருக்காது. ஏனெனில் தமிழ் சினிமா இரசிகர்களே தம் அபிமான ஹீரோக்களைத் அவமதிக்கவும் உண்மையான உன்னதமான நடிகர்களை கொண்டாடவும் தொடங்கிவிட்டார்கள்.
ஆம், மிஸ்கினின் சினிமா பற்றிய சிந்தனைகளோடும் கோட்பாடுகளுடனும் ஒத்ததாகப் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது தமிழ் சினிமா,
தன் மீதான விமர்சனங்கள் அவதூறுகள் எதையும் கணக்கில் எடுக்காது எதற்காக் உரத்தும் உயர்த்தியும் குரல் கொடுத்து வந்தாரோ அதற்கான மாற்றங்கள் அதற்கான முன்னெடுப்புகள் தமிழ் சினிமாவில் நடைபெறத் தொடங்கியுள்ளன.
ஆகவேதான் மீண்டும் சொல்கிறேன்...
இனிவரும் காலம் மிஸ்கினுடையது.
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் மாஸ்டர் மிஸ்கின்.
அன்புடன்
சிவா சாந்தகுமார்
Comentarios